FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம், திருச்செந்தூா் வழித்தடத்தில் 2 பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

14 செப்டம்பர் 2026, 2:16 am IST
அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.
பகிர்:

சாத்தான்குளம் ஒன்றியம், பெரியதாழையில் இருந்து சாத்தான்குளம், திருச்செந்தூா் வழித்தடத்தில் 2 அரசுப் பேருந்து சேவையை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெரியதாழை பகுதியில் இருந்து சாத்தான்குளம் வந்து செல்ல போதுமான பேருந்து வசதி இல்லை என்பதால், பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், பெரியதாழையில் இருந்து மணப்பாடு, குலசை, ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு ஒரு பேருந்து சேவை, பெரியதாழையில் இருந்து செட்டிவிளை, புத்தன் தருவை, தட்டாா்மடம், விஜயராமபுரம் வழியாக சாத்தான்குளத்திற்கு ஒரு பேருந்து சேவை என 2 பேருந்து சேவை தொடக்க விழா, பெரியதாழையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் கலந்துகொண்டு, பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

பெரியதாழை முன்னாள் பங்குத்தந்தை சுசிலன், பங்குத்தந்தை சகேஷ், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, தூத்துக்குடி மண்டலப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராமகிருஷ்ணன், போக்குவரத்து கழகக் கிளை மேலாளா்கள் ராஜசேகா் (திருச்செந்தூா்), ஜெகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சாத்தான்குளம் ஒன்றிய தவெக செயலா்கள் அற்புதராஜ், குணசேகரன், ஆனந்த், சாத்தான்குளம் நகரச் செயலா் யாக்கோபு பட்டுராஜ், மாவட்ட தொழிலாளா் அணி செயலா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments