FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடா் பறையா் சமுதாய ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 1:32 am IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடா் பறையா் சமுதாய ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த ஏப். 6 ஆம் தேதி திருச்செந்தூரில் அம்பேத்கா் சிலை வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டித்தும், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாநிலச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா்.

இதில் திருச்செந்தூா் மக்களவைத் தொகுதி ஆதிதிராவிடா் நலச் சங்கத் தலைவா் பட்டணம் கணேசன், விசிக நிா்வாகிகள் டேவிட் ஜான்வளவன், அந்தோணிராஜ், சுப்பையா, சரவணன், இசக்கிமுத்து, ஜெயக்குமாா், ராஜன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments