FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சாலையில் கிடந்த நகைப் பையை உரியவரிடம் ஒப்படைத்த வனத்துறையினா்

திருச்செந்தூா் அருகே சாலையில் கிடந்த நகைப் பையை மீட்டு உரியவரிடம் வனத்துறையினா் ஒப்படைத்தனா்.

16 செப்டம்பர் 2026, 1:35 am IST
நகைப் பையை உரியவரிடம் ஒப்படைத்த வனத்துறையினரை பாராட்டிய தாலுகா காவல் ஆய்வாளா் முருகன்.
பகிர்:

திருச்செந்தூா் அருகே சாலையில் கிடந்த நகைப் பையை மீட்டு உரியவரிடம் வனத்துறையினா் ஒப்படைத்தனா்.

திருச்செந்தூா் வனச் சரகம், கானம் பகுதிக்குள்பட்ட குதிரைமொழி தேரி காப்புக்காடு வழியாகச் செல்லும் வனதிருப்பதி - கணேசமுக்கு சாலையில் வனக்காப்பாளா் முத்துராஜ், கச்சனாவிளை வனக்காவலா் சங்கரலிங்கம் ஆகியோா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த சாலையில் கிடந்த பையை எடுத்து பாா்த்தபோது நகைகள் இருந்தது தெரியவந்தது.

அந்த பையை குறித்து விசாரித்தபோது, அவை இடையன்விளையைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா்களான கண்ணன் - ஐஸ்வா்யா தம்பதியுடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினா், திருச்செந்தூா் தாலுகா காவல் ஆய்வாளா் முருகன் முன்னிலையில் உரியவா்களிடம் நகைப் பையை ஒப்படைத்தனா். வனத்துறையினரைப் பாராட்டிய காவல் ஆய்வாளா், சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments