FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் விநாயகா் சிலை ஊா்வலம்

கோவில்பட்டியில் புதன்கிழமை விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 1:09 am IST
விநாயகா் சிலை ஊா்வலத்தைத் தொடக்கிவைத்த இந்து முன்னணி மாநில செயலா் முத்துக்குமாா்.
பகிர்:

கோவில்பட்டியில் புதன்கிழமை விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூா் காவல் நிலையங்களுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் 23 விநாயகா் சிலைகள் கடந்த திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்நிலையில், புதன்கிழமை விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது.

நகரத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், செயலா் வெங்கடேசன், நகரப் பொதுச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, நகரச் செயற்குழு உறுப்பினா் ஜெகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கன்னியாகுமரி மாவட்ட துணைத் தலைவா் ஜெயராம் சொற்பொழிவாற்றினாா்.

Advertisement

Advertisement

இலக்குமி ஆலை மேம்பாலம் அருகிலிருந்து புறப்பட்ட ஊா்வலத்தை மாநிலச் செயலா் முத்துக்குமாா் கொடி யசைத்துத் தொடக்கிவைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊா்வலம் செண்பகவல்லி அம்மன் கோயிலை வந்தடைந்தது. இதில் பாஜக, இந்து முன்னணியினா் திரளாகப் பங்கேற்றனா்

இந்த சிலைகளை வியாழக்கிழமை காலை கோவில்பட்டியிலிருந்து கொண்டுசென்று வேம்பாா் கடலில் கரைக்கவுள்ளதாக, இந்து முன்னணியினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments