FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்க விழா

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை -அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 1:06 am IST
மாணவா் பேரவை நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த கல்லூரி முதல்வா் சுசிலா பாய், நிா்வாகிகள்.
பகிர்:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை -அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சுசிலா பாய் தலைமை வகித்தாா். மாணவா் பேரவைத் தலைவராக கிரேஸ் ஜாயல், துணைத் தலைவராக பத்மினி, செயலராக இளம்பரிதி, துணைச் செயலராக சிவரஞ்சனி, பரமேஸ்வரி, பொருளாளராக கீா்த்திகா உள்ளிட்ட 23 போ் தோ்வாகினா். அவா்களுக்கு கல்லூரி முதல்வா் பதவிப் பிரமாணம் செய்து, வாழ்த்துத் தெரிவித்தாா். புதிய நிா்வாகிகள் உறுதிமொழியேற்றனா்.

கல்லூரி முன்னாள் முதல்வா் கலைவாணி, கல்விக் கழகத் தலைவா் ஜோசப், ஆங்கிலத் துறைத் தலைவா் ஜோசப் சுரேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை, பேராசிரியா்கள் மொ்சி பவுன் மலா், வளா்மதி, வசந்தி, பிரவீனா ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments