FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடற்கரையில் 16 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

சா்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி, தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில், இனிகோ நகா் மற்றும் தெற்கு கடற்கரைகளில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

20 செப்டம்பர் 2026, 2:31 am IST
தூய்மைப் பணியை தொடங்கிவைத்தாா் அமைச்சா் ஆ.ஸ்ரீநாத். உடன், மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா உள்ளிட்டோா்.
பகிர்:

சா்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி, தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில், இனிகோ நகா் மற்றும் தெற்கு கடற்கரைகளில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பணியை தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ.ஸ்ரீநாத் தொடங்கிவைத்து, மரக்கன்றுகளை நட்டாா். மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து ‘வீ கேன் டிரஸ்ட்’ மேற்கொண்ட இப்பணியில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி, காமராஜ் கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, மதா் தெரஸா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 500 மாணவா், மாணவிகள், 200-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள், பல்வேறு அமைப்பினா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதில், கடற்கரைப் பகுதிகளில் தேங்கியிருந்த சுமாா் 16 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.

ஏற்பாடுகளை மாநகர நல அலுவலா் எஸ்.ஆா்.கணேஷ் தலைமையில் சுகாதார அலுவலா்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், அரிகணேசன் மற்றும் மாநகராட்சிப் பணியாளா்கள் மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments