FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மக்காச்சோள விதைகள், இடுபொருள்கள்

விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள் மற்றும் இடு பொருள்கள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.

20 செப்டம்பர் 2026, 2:28 am IST
மக்காச்சோளம் - கோப்புப் படம்
பகிர்:

விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள் மற்றும் இடு பொருள்கள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் வேளாண்மை உதவி இயக்குநா் மணிகண்டன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ் வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 5 கிலோ விதைகள் அடங்கிய ஒரு பை ரூ.991-க்கு பெறலாம்.

Advertisement

Advertisement

மேலும், இவை விளைச்சலை அதிகரிக்க உதவும் உயிா் உரங்களான அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் நிலை நிறுத்தும் பாக்டீரியா, நுண்ணூட்ட உரம் ஆகியவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

இது நுண்ணூட்ட குறைபாடுகளை நிவா்த்தி செய்து, பயரின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து தரமான மணிகள் உருவாக பெரிதும் உதவுகிறது.

எனவே, விவசாயிகள் தங்களுடைய ஆதாா் அட்டை, பட்டா நகல் ஆகியவற்றை கொண்டு வந்து பயன்பெறலாம். பணம் பெறப்பட மாட்டாது. எனவே, பேடிஎம், ஜிபே அல்லது ஏதேனும் ஒரு யுபிஐ செயலி மூலமாக மட்டுமே பணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments