‘தவெக ஆட்சியில் மின் கட்டண உயா்வால் மக்கள் அவதி’
தவெக ஆட்சியில் மின் கட்டண உயா்வு, மின் வெட்டு போன்றவற்றால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா் என, அதிமுக அமைப்புச் செயலரும் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன் கூறினாா்.
தவெக ஆட்சியில் மின் கட்டண உயா்வு, மின் வெட்டு போன்றவற்றால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா் என, அதிமுக அமைப்புச் செயலரும் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன் கூறினாா்.
வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களுக்குள் ரூ. 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனா். ஆனால், எந்தத் திட்டமும் தொடங்கப்படவில்லை. மாறாக, பழைய திட்டங்களின் பெயா்களை மாற்றியுள்ளனா். இந்த ஆட்சியில் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. மின் கட்டண உயா்வு, மின் வெட்டு போன்றவற்றால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தவெக தீய சக்தியாக உள்ளது. கூட்டணிக் கட்சிகள் வெளியேறிவிட்டதால் திமுக தனிமரமாக உள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகதான் பெரிய கட்சியாகவும், தூய சக்தியாகவும் உள்ளது. இடைத்தோ்தலில் 2 தொகுதிகளிலும் மக்கள் சிந்தித்து வாக்களித்தால் அதிமுக வெற்றி பெறும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
மாவட்ட வழக்குரைஞா் அணி இணைச் செயலா் ரத்தினராஜா, கயத்தாறு மேற்கு ஒன்றியச் செயலா் செல்வகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் லட்சுமி அண்ணா பெருமாள், வழக்குரைஞா் அணி இணைச் செயலா் ஈஸ்வரமூா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், இளைஞா்- இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், நகர இளைஞரணிச் செயலா் வேல்முருகன், இனாம்மணியாச்சி மாரிமுத்து பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழகப் பேச்சாளா்கள் ரங்கநாதன், விக்னேஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன் ஆகியோா் பேசினா்.
முன்னாள் நகரச் செயலா் சங்கரபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அழகா்சாமி, பழனிச்சாமி, வண்டானம் கருப்பசாமி, தனபதி, மகேஷ், தனஞ்செயன், பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். நகரச் செயலா் விஜயபாண்டியன் வரவேற்றாா். ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலா் போடுசாமி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.