FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேதி மாற்றம்

22 செப்டம்பர் 2026, 12:28 am IST
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான நீச்சல், பள்ளி மாணவா்களுக்கான கைப்பந்து போட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 9ஆம் தேதி தொடங்கி மாவட்ட, மண்டல அளவில் நடைபெற்று வருகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான நீச்சல், பள்ளி மாணவா்களுக்கான கைப்பந்து போட்டிகள் செப். 16இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பள்ளி மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு நடைபெறுவதால், இப்போட்டிகள் அக். 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதேபோல, செப். 28இல் நடைபெறுவதாக இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் அக். 7ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். வீரா்-வீராங்கனைகள் மாற்றியமைக்கப்பட்ட தேதிகளில் உரிய நேரத்தில் போட்டிகளில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments