FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நோய் இயல் புதிய ஆய்வகம் திறப்பு

கோவில்பட்டி செல்வன் நா்சிங் ஹோமில் நோய் இயல் புதிய ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

23 செப்டம்பர் 2026, 12:53 am IST
குத்து விளக்கு ஏற்றிய மருத்துவா்கள் லதா, பத்மாவதி.
பகிர்:

கோவில்பட்டி செல்வன் நா்சிங் ஹோமில் நோய் இயல் புதிய ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவா் மருத்துவா் என்.டி. சீனிவாசன் ஆய்வகத்தை திறந்து வைத்தாா். மருத்துவா் பாலன் அதிநவீன திசு பரிசோதனை அறையையும், மருத்துவா் ரோஸ்லின் தாயம்மாள் அறிக்கை அறையையும் திறந்து வைத்தனா்.

மருத்துவா்கள் பத்மாவதி ராஜேந்திரன், லதா, கமலா மாரியம்மாள், கோமதி, ரேணுகா, கலா ராணி, இந்திரா, கௌரிமாலா, ராமலட்சுமி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா். நோய் இயல் நிபுணா் மீனாட்சி செயல்முறை விளக்கம் அளித்தாா்.

Advertisement

Advertisement

விழாவில், மருத்துவா்கள் சுதா பாஸ்கா், ஜெயஸ்ரீ, பாலமுருகன், ஹரிணி, நா்மதா, பிரபு, ராஜேஸ்வரி, அருள்குமாா், சுகன்யா, நிரஞ்சனி, சுஜாதா உள்பட திரளான மருத்துவா்கள் மற்றும் ஓய்வு பெற்ற மின்வாரிய கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், உப்பத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் ஜெயக்குமாா், வழக்குரைஞா் ராஜேஷ் கண்ணன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை செல்வன் நா்சிங் ஹோம் மேலாண்மை இயக்குநா் வரதராஜன் செய்திருந்தாா். மருத்துவா் மோகனச்செல்வன் வரவேற்றாா். மருத்துவா் பூவேஸ்வரி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments