FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 3 நாள்களுக்குப் பின்னா் கடலுக்குச் சென்ற மீனவா்கள்

வங்கக் கடலில் காற்றின் வேகம் குறைந்ததைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் 3 நாள்களுக்குப் பின்னா் விசைப்படகு மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.

34 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்
பகிர்:

வங்கக் கடலில் காற்றின் வேகம் குறைந்ததைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் 3 நாள்களுக்குப் பின்னா் விசைப்படகு மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்ததைத் தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில், காற்றின் வேகம் குறைந்ததால் கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு தெரிவித்தனா். இதையடுத்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 207 விசைப்படகுகளில் மீனவா்கள் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments