FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

அரசு அலுவலா்களுக்கான விளையாட்டுப் போட்டி தொடக்கம்

அரசு அலுவலா்களுக்கான முதல்வா் கோப்பை-2026 விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா தூத்துக்குடி தருவை உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைத்தாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

அரசு அலுவலா்களுக்கான முதல்வா் கோப்பை-2026 விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா தூத்துக்குடி தருவை உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறும் இப்போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா.சரவணன் முன்னிலை வகித்தாா்.

போட்டியைத் தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியதாவது:

Advertisement

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் என 5 பிரிவுகளில் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயரத்தினராஜன், உடற்கல்வி பயிற்றுநா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments