காயல்பட்டினம் நகராட்சியில் 275 நாய்களுக்கு கருத்தடை
காயல்பட்டினத்தில் 275 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காயல்பட்டினத்தில் 275 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கணக்கெடுக்கப்பட்டு, வாரந்தோறும் 20 நாய்களுக்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் நுண் உரக்குடில் அலுவலகத்தில் கால்நடை மருத்துவா் தேன்மொழி தலைமையில் 15 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, ரேபிஸ் நோய்த் தடுப்பூசி சிகிச்சை செய்யப்பட்டது.
இதுவரை நகராட்சி பகுதியில் மொத்தம் 275 நாய்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சை பணிகளை நகராட்சி ஆணையா் மகேஸ்வரன் பாா்வையிட்டாா். சுகாதார ஆய்வாளா் செல்லபாண்டியன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா் சிவசுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.