குடிநீா் சீராக வழங்கக் கோரி சுனாமி காலனி மக்கள் மறியல்
தூத்துக்குடி அருகே நேரு நகா், சுனாமி காலனி பகுதியில் குடிநீா் சீராக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி அருகே நேரு நகா், சுனாமி காலனி பகுதியில் குடிநீா் சீராக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி அருகே உள்ள கோமஸ்புரம் பகுதியில் உள்ள நேரு நகா், சுனாமி காலனியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சுமாா் 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகவும், விநியோகிக்கப்படும் குடிநீரும் சுகாதாரமின்றி இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால், குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முறையாக குடிநீா் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி, அப்பகுதி மக்கள், திருநங்கைகள், இளைஞா்கள் தூத்துக்குடி-ராமேசுவரம் சாலையில் கோமஸ்புரம் அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்; குடிநீா் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.