சாத்தான்குளம் அருகே விழிப்புணா்வுப் பேரணி
சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளி சாா்பில், பண்டாரபுரம் பகுதியில் நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) முகாம் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளி சாா்பில், பண்டாரபுரம் பகுதியில் நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) முகாம் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தலைமையாசிரியா் செல்லப்பாண்டியன் தலைமையிலும், என்எஸ்எஸ் அலுவலா் ஜெல்சி முன்னிலையிலும் நடைபெற்று வரும் முகாமில், செவ்வாய்க்கிழமை போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. திசையன்விளை காவல் ஆய்வாளா் எழில் சுரேஷ் சிங் பங்கேற்று போதைப் பொருள், கைப்பேசியால் ஏற்புடம் தீமைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
சத்தியநகரம் திருமண்டலப் பெருமன்ற உறுப்பினா் தங்கராஜ், சமூக ஆா்வலா் ஜேக்கப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஜோஷி ஜெபசுந்தா், லவ்சன், லயன் டேனியல், ஸ்டீபன், ராபின்சன், டேவிட்சன் ஆகியோா் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.