மலைக்கோட்டை பகுதியில் யாசகம் பெற்ற 20 போ் மீட்பு
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் யாசகம் பெற்ற 20 பேரை மாவட்ட நிா்வாகத்தினா் மீட்டு மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பினா்.
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் யாசகம் பெற்ற 20 பேரை மாவட்ட நிா்வாகத்தினா் மீட்டு மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பினா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, திருச்சி மாநகரப் பகுதிகளில் யாசகம் பெறுவோரை மீட்டு மறுவாழ்வு அளிக்க ஏதுவாக வெள்ளிக்கிழமை களப்பணி ஆய்வு நடைபெற்றது.
இதில், திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் உதவி காவல் ஆணையரகத்துக்குள்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், பெரியசாமி டவா், மலைக்கோட்டை கோயில், தெப்பகுளம் ஆகிய பகுதிகளில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகப் பணியாளா், தொழிலாளா் நலத்துறை ஆய்வாளா், காவல்துறை அலுவலா்கள், ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு, சிறப்பு சிறாா் காவல் அலகு, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஆய்வு நடத்தினா்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வில் 20 யாசகம் பெறும் நபா்கள் (ஆண்கள் - 6, பெண்கள் - 14) மீட்கப்பட்டு, முதியோா் இல்லங்கள், மனநலக் காப்பகங்கள், யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.