விதைப்பந்து தயாரிப்புக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழகாவட்டாங்குறிச்சி ஊர்புற நூலகத்தில் ம.சா.சாமிநாதன் ஆராய்ச்சி மையம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழகாவட்டாங்குறிச்சி ஊர்புற நூலகத்தில் ம.சா.சாமிநாதன் ஆராய்ச்சி மையம், இந்திய நூலக இயக்கம், ஐக்கிய நாடுகள் கூட்டுறவு இணைந்து விதைப்பந்து தயாரிப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
நூலகர் அம்பேத்கர் தலைமை வகித்து பேசுகையில், மண் உருண்டையில் விதைகளை வைத்து காயவைத்து நிலப்பகுதிகளில் போட்டு விட்டால் மழைக்காலங்களில் மண் உருண்டை கரைந்து வயல்வெளிகளில் பரவி, விதைகள் முளைத்து மரங்கள் உருவாவதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.தொடர்ந்து விதைப்பந்து தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூலகர் ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். நூலகர் திருநாவுக்கரசு நன்றி கூறினார். மேலும், இதே விதைப்பந்து கருத்தரங்கம் குந்தபுரம் பகுதி நேர நூலகத்திலும் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.