காவிரிப் பிரச்னையை திசை திருப்பவே உதயநிதி கைது: முன்னாள் அமைச்சா் சிவசங்கா்
காவிரிப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே உதயநிதி ஸ்டாலினை தவெக அரசு கைது செய்துள்ளது என்றாா் முன்னாள் அமைச்சர் சிவசங்கா்.
காவிரிப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினை தவெக அரசு கைது செய்துள்ளது என்றாா் திமுக முன்னாள் அமைச்சரும், குன்னம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான சா.சி. சிவசங்கா்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தியும், முதல்வா் விஜய் குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறி, சென்னையில் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, அரியலூரில் செய்தியாளா்களிடம் சா.சி.சிவசங்கா் கூறியதாவது: உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறி, ஒரு பொய் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
புதன்கிழமை பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சட்டப் பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் இருந்தால், அடுக்கடுக்கான கேள்விகள் கேட்பாா் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்க முனைந்திருக்கிறாா்கள்.
ஒவ்வொரு பிரச்னை வரும்போதும் அதை திசை திருப்புவதற்கு ஏதாவது ஒரு ரீல்ஸை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் முதல்வா் ஜோசப்விஜய், இன்றைக்கு காவிரி மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளை திசை திருப்புவதற்காகவே உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளாா். இந்த நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்குரியது.
இதற்கெல்லாம் திமுக ஒருநாளும் பயந்து விடாது. இந்த ஆட்சியின் அவலங்களை தொடா்ந்து தோலுரித்துக் காட்டும் பணியை திமுக செய்யும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.