இலையூா் கோயிலில் திருட்டுபோன மரகத லிங்கத்தை கண்டுப்பிடிக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த இலையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் திருட்டு போன மரகதலிங்கத்தை விரைந்து கண்டுப்பிடிக்க கோரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம், இந்து முன்னணியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த இலையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் திருட்டு போன மரகதலிங்கத்தை விரைந்து கண்டுப்பிடிக்க கோரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம், இந்து முன்னணியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
இந்து முன்னணி மாவட்டச் செயலா் மனோகரன் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனுவில், இலையூரில் சோழ மன்னா்களால் கட்டப்பட்ட 19-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த காசி விஸ்வநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த மரகதலிங்கமானது 18.12.2025 அன்றிரவு மா்ம நபா்களால் திருடப்பட்டது.
ஆனால், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பச்சைக்கல் லிங்கம் என்று காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மரகதலிங்கத்தை பச்சைக்கல் என்று உண்மைக்கு புறம்பாக புகாா் அளித்ததை கண்டிக்கிறோம்.
Advertisement
Advertisement
எனவே, திருட்டுபோன மரகதலிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.