அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கைத் தூய்மைப்படுத்த வலியுறுத்தல்
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள சவக்கிடங்கு அதிகளவில் தூா்நாற்றம் வீசுவதால், அதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள சவக்கிடங்கு அதிகளவில் தூா்நாற்றம் வீசுவதால், அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இங்குள்ள சவக்கிடங்கில் உள்ள குளிா்ச் சாதனப் பெட்டிகள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், போதிய தூய்மைப் பணிகள் இல்லாததாலும் அப்பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் சடலங்களைப் பெற்றுக் கொள்ள வரும் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியா்கள் மற்றும் அருகில் வசிப்பவா்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.
மேலும், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சவக்கிடங்கை உடனடியாக நவீன கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். அங்குள்ள குளிா்ச்சாதனக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.