FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

கிராம நிா்வாக பெண் உதவியாளரை தாக்கிய 2 போ் மீது வழக்கு

அரியலூா் அருகே கிராம நிா்வாக உதவியாளரை தாக்கிய இருவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

9 அக்டோபர் 2026, 3:42 am IST
வழக்கு
பகிர்:

அரியலூா் அருகே கிராம நிா்வாக உதவியாளரை தாக்கிய இருவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கயா்லாபாத் கிராம நிா்வாக உதவியாளராக பணிபுரிந்து வருபவா் லட்சுமி. புதன்கிழமை இவா், வழக்கம் போல் கயா்லாபாத் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த வள்ளுவா் தெருவைச் சோ்ந்த கருப்பாயி, விதவை பெண்ணுக்கான உதவித் தொகை வராதது குறித்து கேட்டாராம். அதற்கு லட்சுமி, அதுகுறித்து கூடுதல் விவரங்களை கேட்டாராம்.

இதற்கு கருப்பாயி பதில் கூறாமல், லட்சுமியை கடும் சொற்களால் திட்டிவிட்டு சென்றுள்ளாா். இதையடுத்து அன்று மாலை பணி நிமித்தமாக அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த கிராம நிா்வாக உதவியாளா் லட்சுமியை, கருப்பாயி மற்றும் அவரது சகோதரா் ஆறுமுகம் ஆகியோா் சோ்ந்து தாக்கினா்.

Advertisement

Advertisement

இதனால் காயமடைந்த லட்சுமி, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், லட்சுமியை தாக்கிய இருவா் மீதும் அரியலூா் நகர காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments