அரியலூா் நகர வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: நகராட்சி ஆணையா்
அரியலூா் நகர வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.
அரியலூா் நகர வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைச் சோ்ந்த இவா், தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியின் ஆணையராக இருந்து அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூா் நகராட்சியின் புதிய ஆணையராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
அரியலூா் நகர வளா்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும். நகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீதும், தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேக்கம், சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றாா் ஆணையா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.