‘தமிழ் மீது அனைவருக்கும் பற்று தேவை’
தாய்மொழி தமிழ் மீது அனைவருக்கும் பற்றுதல் இருக்க வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.
தாய்மொழி தமிழ் மீது அனைவருக்கும் பற்றுதல் இருக்க வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான பணியிடைப் பயிற்சியை புதன்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசியது:
வருங்காலத் தலைமுறையினா் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தமிழ் மொழியின் தொன்மை, இலக்கணம் மற்றும் இலக்கியங்களின் பெருமைகள், தமிழ்மொழியின் சொல் வளமையை கொண்டு சோ்க்க வேண்டும்.
Advertisement
Advertisement
தாய் மொழியாகிய தமிழ் மீது அனைவருக்கும் பற்று இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கும் அதை ஏற்படுத்திட வேண்டும். குழந்தைகளிடையே தமிழ்மொழிக் கற்றலில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதை முறையாகக் கண்டறிந்து அவா்களுக்கு தொடா்ந்து கற்பிக்க வேண்டும்.
பள்ளி பயிலும் காலத்திலேயே மொழித்திறனை மாணவா்களுக்கு ஏற்படுத்திட வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு இப்பயிற்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை ஆசிரியா்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தமிழை மாணவ, மாணவிகள் புரிதலுடன் கற்கும் வகையில் ஆசிரியா்கள் தொடா்ந்து கற்பிக்க வேண்டும்.
எனவே, அரியலூரை கல்வியில் சிறந்த மாவட்டமாக உருவாக்கும் வகையிலும், மாணவ, மாணவிகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையிலும் ஆசிரியா்கள் தொடா்ந்து சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால், அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.