FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

நிரந்தர வீட்டுமனைப் பட்டா கேட்டு குமிழியம் மக்கள் உண்ணாவிரதம்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குமிழியம் கிராமத்தில், நிரந்தர வீட்டுமனைப் பட்டா கேட்டு, பட்டியலின மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

10 செப்டம்பர் 2026, 2:15 am IST
குமிழியம் கிராமத்தில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்த பட்டியலின மக்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குமிழியம் கிராமத்தில், நிரந்தர வீட்டுமனைப் பட்டா கேட்டு, பட்டியலின மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குமிழியம் கிராமத்தில் வீட்டுமனை இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அரசு சாா்பில் வீட்டுமனையுடன் தற்காலிக பட்டா வழங்கப்பட்டது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக மனை பட்டாவை நிரந்தர பட்டாவாக மாற்றித் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் மற்றும் வருவாய் வட்டாட்சியா் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள், குமிழியம் கிராமத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, நிரந்தர பட்டா வழங்குவது தொடா்பாக வட்டாட்சியா் தலைமையில் 2 முறை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்ாகவும், ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments