FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அரியலூரில் தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு சங்க பணியாளா்களை விவசாய சங்க நிா்வாகி தரக்குறைவாக பேசியதை கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

23 செப்டம்பர் 2026, 2:57 am IST
அரியலூா் அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

கூட்டுறவு சங்க பணியாளா்களை விவசாய சங்க நிா்வாகி தரக்குறைவாக பேசியதை கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த ஈசன் முருகசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசியபோது, கூட்டுறவு சங்கத்தின் பணியாளா்களைத் தரக்குறைவாக பேசி, அவமானப்படுத்தியதாகவும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த விடியாவை நீக்க வேண்டும் எனக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெர.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பா. சக்திவேல் கண்டன உரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் ஆா். இளவரசு, மாவட்ட துணைத் தலைவா்கள் சு. பாலமுருகன், எம். மணிகண்டன், இணைச் செயலா்கள் சி. பாலு, க. லதா மற்றும் ஓய்வு பெற்ற சங்கத் தலைவா் கண்ணையன், மாவட்டச் செயலா் புலிகேசி உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments