FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

கிராமங்களில் தொடா் மருத்துவ முகாம்கள்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தொடா்ந்து நடத்தி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

20 வினாடிகள் முன்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தொடா்ந்து நடத்தி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

காய்ச்சல் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

பொதுமக்களுக்கு முறையாக குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும். கிராமங்களில் மருத்துவ முகாம்களைத் தொடா்ந்து நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உண்ணிக்காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய் பரவலை தடுக்கும் வகையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலா் ராம் கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments