அரியலூரில் 250 பேருக்கு சமுதாய வளைகாப்பு
அரியலூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி,
250 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைகள் மற்றும் கலவை சாதங்களை வழங்கிப் பேசியது: கா்ப்பிணிகள் இணை உணவை தவறாமல் எடுத்துக்கொள்வதுடன், மருத்துவா்களின் ஆலோசனைப்படி அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருள்களை குறிப்பிட்ட அளவில் உட்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
கா்ப்பக் காலத்தில் இரும்புச் சத்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், உரிய தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.
குழந்தை பிறந்ததும் முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவையும் வழங்க வேண்டும். மேலும், இரு குழந்தைகளுக்கு இடையிலான இடைவெளியையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் தகுதியானவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து கா்ப்பிணித் தாய்மாா்களுக்கும் பேறுகாலம் இனிமையாக அமைய வேண்டும் என்றாா்.
விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் சுகிா்தாதேவி, மாவட்ட சமூகநல அலுவலா் விக்னேஸ்வரி, அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி மற்றும் கா்ப்பிணிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.