போட்டிகளில் வென்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பரிசு
குளித்தலையில் பள்ளி மாணவிகளுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குளித்தலையில் பள்ளி மாணவிகளுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் போட்டியை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பி. இந்துராணி மற்றும் உதவி ஆய்வாளர் எம். பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், பள்ளியில் 8, 9 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவிகளுக்கு மது ஒழிப்பு குறித்து கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியயை மஞ்சுளாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.