மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. யில் தமிழில் தேர்வெழுத தடைக்கு திருக்குறள் பேரவை கண்டனம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் தமிழில் தேர்வெழுத தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு கரூர் திருக்குறள் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் தமிழில் தேர்வெழுத தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு கரூர் திருக்குறள் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேரவையின் செயலர் மேலை. பழநியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள 89 கல்லூரிகளிலும் இனிமேல் தமிழில் தேர்வு எழுத தடை என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுதவேண்டும் என ஆணையிட்டுள்ளது. இது தமிழ் மொழிக்கு ஆபத்தான அறிவிப்பாகும். பலரது எதிர்கால உயர்கல்வி கேள்விக்குரியதாக ஆகிவிடும். தாய்மொழியில் மட்டுமே கல்வி தேர்வு என தமிழ் அமைப்புகள் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் சூழலில் தமிழில் தேர்வு எழுதத் தடை என்பதை கண்டிக்கிறோம்.
உடனே இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். 10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 600க்கு மேற்பட்ட பள்ளிகளை மூடும் திட்டத்தையும் அரசு மறுபரிசீலனை செய்து அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்.
ஏழ்மையான குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை மூடினால் அடுத்த ஊருக்கு சென்று படித்து வருவது இயலாததாகி, கல்வி முடக்கப்பட்டதாய் ஆகிவிடும். எனவே அரசு இவ் இரண்டு செயல்பாடுகளையும் தவிர்க்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.