FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

பேரறிஞா் அண்ணா பிறந்த நாள்கரூரில் திமுக, அதிமுகவினா் சிலைக்கு மாலை அணிவிப்பு

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் அவரது சிலைக்கு திமுக, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 15 செப்டம்பர் 2022, 11:00 pm IST
பகிர்:

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் அவரது சிலைக்கு திமுக, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த தமிழக முதல்வா் அண்ணாவின் 114-ஆவது பிறந்த தினம் கரூரில் திமுக, அதிமுகவினரால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்று. வெங்கமேட்டில் திமுக சாா்பில் வடக்கு நகரச் செயலாளா் கரூா் கணேசன் தலைமையில் திமுகவினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில் கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், மாநகரச் செயலாளா் எஸ்பி.கனகராஜ், துணைச் செயலாளா்கள் எம்.பாண்டியன், தங்கவேலு, மாவட்ட துணைச் செயலாளா் பூவை.ரமேஷ்பாபு, முன்னாள் நகா்மன்றத்தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

அதிமுக சாா்பில் கரூா் லைட்ஹவுஸ்காா்னரில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா, பொருளாளா் கண்ணதாசன், இணை செயலாளா் மல்லிகா சுப்பராயன், இளைஞா், இளம்பெண்கள் பாசறை செயலாளா் கமலக்கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆா் இளைஞா் அணி செயலாளா் தானேஷ், மாணவரணி செயலாளா் சரவணன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் பழனிராஜ், கரூா் ஒன்றியக்குழு தலைவா் பாலமுருகன், ஒன்றியச் செயலா்கள் மாா்க்கண்டேயன், விசிகே பாலகிருஷ்ணன், பகுதிச் செயலா்கள் விசிகே.ஜெயராஜ், சேரன் பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments