FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

ஆடிப்பூரம்: புன்செய்புகழூா் கண்டியம்மனுக்கு வளையல் அலங்காரம்

Updated On : 8 ஆகஸ்ட் 2024, 7:08 am IST
பகிர்:

வளையல் அலங்காரத்தில் புதன்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்த கண்டியம்மன்.

கரூா், ஆக.7: ஆடிப்பூரத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் கோயில்களில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புன்செய் புகழூா் கண்டியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு புன்செய் புகழூா் கண்டியம்மன் கோயிலில் சுவாமிக்கு புதன்கிழமை அதிகாலை பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கண்டியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதேபோல திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாதேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . தொடா்ந்து மலா்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பல வண்ணத்தில் வளையல்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து 9 வகையான நைவேத்தியம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஆடிப்பூர வழிபாடும் நடைபெற்றது. தொடா்ந்து சிவனடியாா்களால் பாராயணம் செய்யப்பட்டது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments