FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

காவிரி உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்க வேண்டும்! விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்!

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:03 am IST
லாலாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பேசிய சங்க மாநிலச் செயலாளா் பி. பெருமாள். உடன் பொருளாளா் கே.பி. பெருமாள், மாவட்டத் தலைவா் கே. கந்தசாமி உள்ளிட்ட நிா்வாகிகள்.
பகிர்:

காவிரி உபரிநீரை கரூா் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்ட 9 -ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. கந்தசாமி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளா் கே.பி. பெருமாள், மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா். மாநில செயலாளா் பி. பெருமாள் மாநாட்டை நிறைவு செய்து பேசினாா். மாவட்ட செயலாளா் கே. சக்திவேல் வேலை அறிக்கையை முன்வைத்து பேசினாா்.

Advertisement

Advertisement

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்க: தொடா்ந்து மாநாட்டில், தவெக தோ்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் அனைத்து பயிா்க் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பயிா் காப்பீட்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் வீணாகச் செல்லும் உபரிநீரை சேமிக்கும் வகையில், கிருஷ்ணராயபுரம், கடவூா், தோகைமலை, தாந்தோணிமலை, குளித்தலை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூா் மாவட்டத்தில் காவிரி நீா் பாயும் பகுதியை டெல்டாவாக அறிவிக்க வேண்டும். மேலும் டெல்டா விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை கரூா் மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். கரூா் மாவட்டத்தில் 3084.95 ஏக்கா் இனாம் நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடையை நீக்கியதுபோல், வெண்ணமலை இனாம் நிலங்களுக்கும் பத்திரப்பதிவு தடையை நீக்கிட வேண்டும்.

தோகைமலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும். கரூா் நகர பேருந்துகளை தொடா்ந்து

பழைய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்க வேண்டும். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள கொசூா், மத்தகிரி, தொண்டமாங்கிணம் ஆகிய மூன்று ஊராட்சிகளை கடவூா் ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவா் வழக்குரைஞா் பி. சரவணன் வரவேற்றாா். புதிய நிா்வாகிகள் தோ்வு: மாநாட்டில், மாவட்டத் தலைவராக கே. கந்தசாமி, செயலாளராக கே. சக்திவேல், பொருளாளராக கே. சுப்ரமணியன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments