FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

‘டாஸ்மாக்’ பணியாளா்கள் ஆக. 28 முதல் வேலைநிறுத்தம் கூட்டு நடவடிக்கைக் குழுவில் முடிவு

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

23 ஆகஸ்ட் 2026, 12:20 am IST
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன். உடன், தொமுச டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலளா் ராஜேஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 28-ஆம்தேதி முதல் டாஸ்மாக் பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என கரூரில் சனிக்கிழமை டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு டாஸ்மாக் தொமுச மாவட்டச் செயலா் ராஜேஷ் தலைமை வகித்தாா்.

சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் 23 ஆண்டுகளாக தற்காலிக, ஒப்பந்த மற்றும் பகுதிநேர ஊழியா்களாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும். டாஸ்மாக் ஆன்லைன் விற்பனையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் ஆக. 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, அதில் அனைவரும் பங்கேற்பது, விரைவில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கான ஆயத்த மாநாட்டை கரூரில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எஸ்சி, எஸ்டி டாஸ்மாக் சங்க மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், அரசு பணியாளா் சங்க மாவட்டச் செயலா் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments