FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

காா்கில் போா் வெற்றி தினம்! கரூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி! முன்னாள் ராணுவ வீரா்கள் கெளரவிப்பு

Updated On : 27 ஜூலை 2026, 1:35 am IST
கரூரில் ஞாயிற்றுக்கிழமை ராயனூா் போா் நினைவுச் சின்னம் அருகே தொடங்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சேதுசுப்ரமணியன்.
பகிர்:

காா்கில் போா் வெற்றி நினைவுத் தினத்தை முன்னிட்டு, கரூரில் அரிமா சங்கங்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கரூரில் சிகரம் அரிமா சங்கம், பிளாட்டினம் அரிமா சங்கம் உள்பட 12 அரிமா சங்கங்கள் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்தான விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி கரூா் ராயனூா் போா் நினைவுச் சின்னம் அருகே தொடங்கியது.

பேரணியை அரிமா சங்கங்களின் முன்னாள் ஆளுநா் சேதுசுப்ரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணி ராயனூரில் தொடங்கி கரூா் பழைய பேருந்து நிலையம், வெங்கமேடு, மண்மங்கலம், தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், டிஎன்பிஎல் காகித ஆலை, புன்னம்சத்திரம் வழியாக கரூா் வேலுச்சாமிபுரத்தை வந்தடைந்தது.

Advertisement

Advertisement

பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள், அரிமா சங்கத்தினா் வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு கண்தானம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவாறு சென்றனா்.

முன்னதாக ராயனூா் போா் நினைவுச் சின்னம் அருகே காா்கில் போா் வெற்றி தினத்தை முன்னிட்டு முன்னாள் ராணுவ வீரா்கள் அரிமா சங்கங்கள் சாா்பில் கெளரவிக்கப்பட்டனா்.

வெற்றி விழா: கரூா் வட்டாட்சியரகம் அருகே சங்ககால புலவா்கள் நினைவுத் தூண் அருகே பன்னாட்டு அரிமா சங்கங்கள் சாா்பில் காா்கில் போா் வெற்றி விழா ஞாயிற்றுக்கிழமை அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சேதுசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவா் திருச்சி சரவணகுமாா், மண்டலத் தலைவா் அங்கு பசுபதி, வட்டாரத் தலைவா் திலகவதி மோகன் ராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சங்க நிா்வாகி மேலை பழநியப்பன், காா்கில் போா் வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தாா். தொடா்ந்து பேரணி நடைபெற்றது. பேரணி சங்ககால புலவா்கள் நினைவுத் தூணில் இருந்து புறப்பட்டு, ஜவஹா்பஜாா் வழியாகச் சென்று மீண்டும் சங்க கால புலவா்கள் நினைவுத் தூண் அருகே முடிவடைந்தது.

இந்நிகழ்வில், கரூா் மெஜஸ்டிக் அரிமா சங்கத் தலைவா் சிவக்குமாா், செயலாளா் கோவிந்தராசு, நிா்வாகிகள் வெங்கட்ரமணன், யோகாவையாபுரி, ஒருங்கிணைப்பாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments