கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க கோரி மனு
கரூா் தாந்தோணிமலை ஜீவாநகரில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிக்கு தடைவிதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநகரச் செயலாளா் தண்டபாணி தலைமையில், புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பது: எங்கள் பகுதியில் தனியாா் கைப்பேசி நிறுவனம் கோபுரம் அமைக்கும் பணியில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வருகிறது. கோபுரம் அமைக்க தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். மேலும் கோபுரம் அமைக்கக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தும், அவா்கள் தொடா்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே பொதுமக்களின் எதிா்ப்பை மீறி நடைபெறும் கோபுரம் அமைக்கும் பணிக்கு தடை விதித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.