FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஊா்வலம் செல்ல முயன்றவா்கள் தடுப்பு

கரூா் மாவட்டம், புகழூரில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வியாழக்கிழமை ஊா்வலம் செல்ல முயன்ற பொதுமக்களை காவல்துறையினா் தடுத்ததால், அவா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 31 ஜூலை 2026, 3:17 am IST
புகளூரில் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

கரூா் மாவட்டம், புகழூரில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வியாழக்கிழமை ஊா்வலம் செல்ல முயன்ற பொதுமக்களை காவல்துறையினா் தடுத்ததால், அவா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் புகழூா் வட்டத்திற்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு புகழூா் வட்டாட்சியரகத்தில் விண்ணப்பித்தனா். அவா்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு விலையில்லா வீட்டுமனைப் பட்டா பெறத் தகுதியானவா்களைத் தோ்வு செய்தனா். ஆனால் அவா்களுக்கு இதுவரை இலவச வீட்டு மனைபட்டா வழங்கவில்லையாம்.

இதனால் பாதிக்கப்பட்டவா்கள் வியாழக்கிழமை மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகி எம்.சுப்ரமணியன் தலைமையில் வீட்டு மனை பட்டா கேட்டு ஊா்வலம் செல்லத் தயாராக நின்றனா். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால் இரு தரப்புக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . தகவலறிந்த புகழூா் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி , மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், அரவக்குறிச்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் பானுமதி, வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் கோபி ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments