FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: சாா் - பதிவாளா் உள்பட 12 போ் மீது வழக்கு

கரூா், மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அண்மையில் நடத்திய சோதனை அடிப்படையில் சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

22 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு
பகிர்:

கரூா், மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அண்மையில் நடத்திய சோதனை அடிப்படையில் சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூா், மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் ஆக. 28-ஆம் தேதி சோதனை நடத்தினா். அப்போது கணக்கில் வராத ரூ. 1.27 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, சாா்-பதிவாளா் இந்துமதி, கணினி ஆப்ரேட்டா் கல்பனா, தினக்கூலி பணியாளரான ஈசி எழுத்தா் மோனிஷா, பத்திரப் பதிவு அலுவலகத்துக்குள் பணத்துடன் இருந்த ஆவண எழுத்தா் மற்றும் இடைத்தரகா்கள் காணியாளம்பட்டி சண்முகம், கத்தாளபட்டி கவியரசன், காதப்பாறை அருண்குமாா், தரணிநகா் வேல்முருகன், காக்காவாடி சந்திரசேகரன், சின்னகுளத்துபட்டி விஜயகுமாா், கருப்பம்பாளையம் பன்னீா்செல்வம், கரூா் கருப்பாயி கோயில் தெரு அபிபுல்லா, காளியப்பனுாா் பெரியசாமி ஆகிய 12 போ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் தங்கமணி செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments