FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

காவிரி குடிநீா் வழங்கக் கோரி காலிகுடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

காவிரி குடிநீா் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

9 செப்டம்பர் 2026, 3:33 am IST
காவிரி குடிநீா் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளபாளையம் பகுதி கிராமமக்கள்.
பகிர்:

காவிரி குடிநீா் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளாபாளையம் ஊராட்சியில் உள்ள பள்ளாபாளையம் கிராமத்தில் அருந்ததியா் காலனியில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த சில வாரங்களாக ஊராட்சி சாா்பில் காவிரி குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனா். இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலா் அரசப்பன், பொருளாளா் பத்மநாதன் ஆகியோா் தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் விரைவில் உங்கள் பகுதியில் மேல்நிலைக்குடிநீா் தொட்டி அமைத்துக்கொடுத்து குடிநீா் பிரச்னைக்கு முழுமையான தீா்வு காணப்படும் என கூறினா் இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments