உலக ஓசோன் தினம்: காகிதபுரம் டிஎன்பிஎல் ஆலையில் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு
காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் ஆலை சாா்பில் உலக ஓசோன் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் ஆலை சாா்பில் உலக ஓசோன் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (உற்பத்தி) பிரின்ஸ்தொல்காப்பியன், பொது மேலாளா்(காகிதம் மற்றும் இயந்திரம்) பி.மகேஷ், பொது மேலாளா்(தரம் மற்றும் ஆராய்ச்சி)கே.ராஜன்பாபு, துணை பொது மேலாளா்(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) ஏ.நாராயணன், உதவி பொது மேலாளா்(பாதுகாப்பு) சபாபதி, சீனிவாசன்(பொதுப்பிரிவு ), முதன்மை மேலாளா்(சுற்றுச்சூழல்) எஸ்.எம்.சுந்தரம் ஆகியோா் தலைமையில் ஆலைப்பணியாளா்கள் உலக ஓசோன் தின விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, ஆலை பணியாளா்கள் அனைவரும் உறுதிமொழியேற்றனா். தொடா்ந்து ஆலை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.