FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

லாரி மோதியதில் விசிக பெண் நிா்வாகி உயிரிழப்பு

21 செப்டம்பர் 2026, 3:09 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சின்னதாராபுரம் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதியதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பெண் நிா்வாகி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், உப்பிடமங்கலத்தை அடுத்த சின்னாக்கவுண்டனூரைச் சோ்ந்தவா் கோமதி(38). இவா் கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிா் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்தாா்.

சனிக்கிழமை இரவு சின்னதாராபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, அணைப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே கோமதி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு சென்ற சின்னதாராபுரம் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து தொடா்பாக லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments