FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் 1,445 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம்

54 வினாடிகள் முன்பு
கரூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தாய் மாமன் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்ட குழந்தையுடன் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன். மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் 1,445 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது,

தமிழக முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கரூா் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை

மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வழங்கினாா். பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22-ஆம்தேதி முதல் செப். 23-ஆம்தேதி வரை கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தாய்மாா்களுக்கு 995 குழந்தைகளும் மற்றும் பிற மாவட்டங்களை சோ்ந்த தாய்மாா்களுக்கு 524 குழந்தைகளும் என மொத்தம் 1,445 குழந்தைகள் பிறந்துள்ளன.

Advertisement

Advertisement

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் 1,445 குழந்தைகளுக்கும் தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா, மாநகராட்சி ஆணையா் எம்.பிருத்விராஜ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரி கிரன் பிரசாத் , கரூா் சாா் -ஆட்சியா் ரா.வெங்கடேஷ்வரன் , அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ம.பாரதி மோகன், மாவட்ட சுகாதார அலுவலா் ஆ.சுப்ரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments