FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.3) நடைபெற உள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:55 am IST
பகிர்:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.3) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பயனடையும் வகையில் நடைபெறும் முகாமில், சென்னை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8, 10 மற்றும் பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்ப படித்தவர்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்போர் கல்விச் சான்று, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் வர வேண்டும்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments