FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெரம்பலூரில் 123 இடங்களில்  விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு 123 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு 123 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
கடந்தாண்டு 203 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதித்ததையடுத்து, நிகழாண்டு பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 
அனுமதி பெற்று வைக்கப்படும் சிலைகளுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், போலீஸாருடன், சிலை அமைப்பு குழுவினரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு இருக்க வேண்டும் என போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 10 அடிக்கு மேல் உயரம் கொண்ட சிலைகளை வைக்கவும், தீப்பிடிக்காத  கொட்டகை அமைக்காத இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் போலீஸார் அனுமதிக்கவில்லை. பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள் செப். 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் திருச்சி காவிரி ஆற்றில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments