FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சாவு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை கோழிப் பண்ணைக்கு மின் இணைப்பு வழங்கிய எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.  

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை கோழிப் பண்ணைக்கு மின் இணைப்பு வழங்கிய எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.  
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கல்லை கிராமத்தை சேர்ந்தவர் அ. பாலுசாமி (51), எலக்ட்ரீசியன். இவர், புதன்கிழமை காலை தனது நண்பரான செந்தில் என்பவரது கோழிப்பண்ணைக்கு மின் இணைப்பு வழங்கியதாகத் தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பாலுசாமி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து செந்தில், அவரை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பாலுசாமி உயிரிழந்தார். இதுகுறித்து செந்தில் அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments