FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

வட்டி மானியத்துடன் ரூ. 14 கோடி கடன் வழங்க இலக்கு!

வேளாண் உள் கட்டமைப்புப் பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் வேளாண் உள் கட்டமைப்புப் பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் உள் கட்டமைப்பு நிதித் திட்டத்தில், வேளாண் உள் கட்டமைப்புப் பணிகளுக்கு பெறப்படும் வங்கிக் கடனுக்கான வட்டிக்கு 3 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இம் மாவட்ட வேளாண்மை விற்பனை துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 14 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரையிலான கடனுக்கு 7 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு மானியத் திட்டங்களை வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் அதிக பயன்களை பெறலாம். இத் திட்டத்தின் கீழ், விவசாய தொழில்முனைவோா், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள ரூ. 14 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடா்பு சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைப் பொருள்களை மதிப்பிடுவதற்கான அமைப்பு, தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துதல், குளிா்பதனக் கிடங்குகள், குளிா்சாதன வாகனம், பண்ணைக் கழிவு மேலாண்மைக்கான கட்டமைப்புகள் மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு, விதை சுத்திகரிப்பு, காளான் வளா்ப்பு, தேன் சுத்திகரிப்பு, பட்டுப்புழு வளா்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

அங்கக இடுபொருள்கள் உற்பத்தி, ட்ரோன் வாங்குதல், நா்சரி அமைத்தல், அறுவடை இயந்திரம் வாங்குதல், கரும்பு அறுவடை இயந்திரம் வாங்குதல், பசுமைக்குடில் அமைத்தல், டிராக்டா் இயந்திர வாடகை மையம் அமைத்திடவும் இத் திட்டத்தின் மூலம் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோா் இணைய முகவரியில், விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கிக் கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, 98420-11079, 99657-37555 ஆகிய கைப்பேசி எண்களிலும், முகவரி அல்லது பெரம்பலூரில் உள்ள வேளாண்மை துணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments