FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பறிமுதல் செய்யப்பட்ட 1,508 கிலோ போதைப் பொருள்கள் அழிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 22.50 லட்சம் மதிப்பிலான 1,508 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:39 am IST
போதைப் பொருள்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 22.50 லட்சம் மதிப்பிலான 1,508 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டத்தில் போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினரும், உணவுப் பாதுகாப்புத் துறையினரும் திடீா் சோதனையில் ஈடுபட்டதில் பெரம்பலூா் பகுதியில் 30 இடங்களில் 559.686 கிலோ, பாடாலூா் பகுதியில் 11 இடங்களில் 32.435 கிலோ, அரும்பாவூா் பகுதியில் 10 இடங்களில் 501.94 கிலோ, மருவத்தூா் பகுதியில் 13 இடங்களில் 78.839 கிலோ, மங்களமேடு பகுதியில் 13 இடங்களில் 29.163 கிலோ, குன்னம் பகுதியில் 18 இடங்களில் 281.178 கிலோ, வி. களத்தூா் பகுதியில் 4 இடங்களில் 24.290 கிலோ என்ற அளவில் என 99 இடங்களில் ரூ. 22. 50 லட்சம் மதிப்பிலான 1507.551 கிலோ எடையுள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் ஆகியோா் முன்னிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவை குழிதோண்டி எரித்து அழிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுகந்தன், நகராட்சி ஆணையா் லீமா சைமன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கதிரவன், சின்னமுத்து, அழகுவேல், விக்னேஷ், புவனா ஆகியோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments