திருட்டு வழக்கில் இருவா் கைது: 21 பவுன் நகைகள் மீட்பு
பெரம்பலூா் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 21 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் மனைவி ராஜலட்சுமி (61). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியா். இவரது கணவா் உயிரிழந்துவிட்ட நிலையில், செப். 10-ஆம் தேதி இரவு ராஜலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் ஜொ்லி சாய் சிந்தியா வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி இரவு வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, 78 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில், தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம், கோரிமேடு பகுதியைச் சோ்ந்த தீனா (25), வேடத்தாம்பட்டியைச் சோ்ந்த காளியப்பன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 21.5 பவுன் நகைகளை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட தீனா, காளியப்பன் ஆகியோரை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.