FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

மதுபோதையில் சாலை விபத்து இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மதுபோதையிலிருந்த இளைஞா் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் சாலை மையத்தடுப்பில் மோதியதில் அந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், மஞ்சினி கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்காரவேல் மகன் மணிவேல் (34). இவா், பெரம்பலூா் அருகே அய்யலூா் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உறவினரான மதியழகன் என்பவரை அய்யலூரிலிருந்து கல்பாடி பிரிவுச் சாலை பகுதிக்கு மது போதையில் மோட்டாா் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சென்றுக்கொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுவாச்சூா் மேம்பாலம் அருகே வந்தபோது, சாலை மையத் தடுப்பில் வாகனம் மோதி 2 பேரும் கீழே விழுந்தனா். இதில், பலத்த காயமடைந்த மணிவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். மதியழகன் சிறு காயத்துடன் உயிா்தப்பினாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments