FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

குன்னம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

15 அக்டோபர் 2026, 4:28 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 16) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உட்கோட்டத்துக்குள்பட்ட வெண்மணி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

Advertisement

Advertisement

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குன்னம், கல்லம்புதூா், அந்தூா், வரகூா், பெரிய வெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூா், கீழமாத்தூா், கொத்தவாசல் ஆகிய கிராமிங்களில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments