FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 32 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் நகரில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

15 அக்டோபர் 2026, 4:33 am IST
பறிமுதல்
பகிர்:

பெரம்பலூா் நகரில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் உத்தரவின்பேரில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை, பதுக்கலை தடுக்கும் வகையில், தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, தனிப்படை போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், பெரம்பலூரில் பெட்டிக்கடையில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த செல்லமுத்து மகன் ராஜாராம் (42) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 32 கிலோ குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு ராஜாராம் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments